ஸகலத் தொடர்நிலைப் பாட்டையும் (USB) நெருப்புக்கம்பியும் (Firewire)
கணினித் தொழிலில் புதிது புதிதாக சொற்கள் தோன்றுகின்றன. புதிதாக நெறிகளும் வளர்கின்றன. கணினி வரலாற்றில் பரிணமித்து வரும் பகுதிதான் தொடர்நிலைத் துறை (Serial Port). முதலில் வந்த கணினிகளில் RS-232 என்ற தொடர்நிலைத் துறை மட்டும் தான் இருந்தது. பிறகு PS/2 என்ற நெறி உருவாகியது. இவ்விரு துறைகளும் மந்தமான தரவு பரிமாற்றுத்திறன் கொண்டிருந்தன. 1.5Mbps (நொடிக்கு 1.5 மெகாபிட்) வேகத்தில் எலி (mouse) அல்லது கோளச்சுட்டி (trackball) உபயோகங்களில் மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. இரண்டு நெறிமுறைகள் - ஸகல தொடர்நிலைப் பாட்டை (USB) மற்றும் நெருப்புக்கம்பி (Firewire) உருவாக்கபட்டன. இவ்விரு நெறிமுறைகளுக்கிடையே ஒற்றுமைகள் உண்டு. USB மற்றும் நெருப்புக்கம்பியின் இணைப்பிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும், நிஜத்தில் ஏற்பற்றது(incompatible) ஆகும்.
நெருப்புக்கம்பி ஆப்பிள் நிருமத்தால் 1980களில் படைக்கப்பட்டது. இது நிலைவட்டுகளிடமிருந்து (hard disk) தரவுப்பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ஆரம்பத்தில் உபயோகிக்கபட்டது. பிறகு புறக்கருவிகளுக்கு (peripherals) நீட்டிக்கப்பட்டது. இதன் வெற்றியைக் கண்ட ஆப்பீள் நிறுமம் இந்த நெறிமுறையை IEEE அமைப்பு மூலம் டிஸம்பர் 1995யில் தரப்படுத்தியது. ஆனால் நெருப்புக்கம்பியின் தரமாக்கத்திற்கு முன்பே ஸோனி நிறுமம் மூலம் நிகழ்பதிவி கருவி (camcorder) தொழிலகத்தில் கடைப்பிடித்து சந்தையில் வெளிவந்தது. ஸோனி நிறுமம் நெறுப்புக்கம்பிக்கு I.Link என்ற பெயரிட்டு அதன் நிகழ்பதிவிகளைச் சந்தையிட்டது. நெருப்புக்கம்பியின் செயல்முறைப்படுத்தல்களில் வேறுபாடுகள் உண்டு. நெருப்புக்கம்பி இன்று ஸோனி மற்றும் ஆப்பிள் கணினிகளில் ப்ரபலமாக காணப்படுகிறது. இது தவிர நிகழ்பதிவிகள், புற நிலைவட்டுகள் (external hard drives), ஒளிவட்டு இயக்கிகள், வருடிகள் (scanners), இணைய படக்கருவிகள் (webcams) போன்ற சாதங்களில் பயன்படுகிறது. நெருப்புக்கம்பியின் தரவுபரிமாற்றம் தொடக்கத்திலேயே 400Mbps வரை ஆதரித்தது.
ஸகல தொடர்நிலை பாட்டை பல நிறுமங்கள்- காம்ப்பேக், இலக்கக் கருவி (Digital Equipment), மைக்ரொஸாஃப்ட், ஆகியவற்றின் கூட்டுழைப்பால் கருத்தமையப்பட்டு 1998இல் தரமாக்கப்பட்டது. மைக்ரொஸாஃப்ட் நிறுமம் விண்டோஸ் 98 இயங்குதளத்தோடு USBவிற்கான இயக்க மென்பொருள்களை (driver) விடுவித்தது. USB1.1 12Mbps மற்றும் 400Mbps வேகங்களில் தரவுகளை பரிமாற்றும். USB2.0 நெறிமுறை 2002இல் தான் வெளியிடப்பட்டது. USB2.0 வெளியீட்டில் தரவு பரிமாற்றம் 480Mbps வரை நீட்டிக்கப்பட்டது.
நெருப்புக்கம்பி என்பது ஒரு சம உரிமை பாட்டை முறைமை (peer-to-peer bus system). நெருப்புக்கம்பிச் சாதனங்கள் அனைத்தும் முழு செயல்கூற்றுக்கள் (functionalities)- ஆண்டான் (master) மற்றும் அடிமை (slave) ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். ஆகையால் நெருப்புக்கம்பிச் சாதனங்கள் USB சாதனங்களைவிட விலை அதிகமானவை. இக்கட்டமைப்பின் பலன் என்னவென்றால் ஒரு கணினி போன்ற புரவர் சாதனம் (host device) ஒரு நெருப்புக்கம்பி அமைப்பில் தேவையில்லை. உதாரணத்திற்கு - ஒரு நிகழ்பதிவி ஒரு இலக்க ஒளித்தோற்ற வட்டு படிப்பியிடம் (DVD player) கணினியின்றி நேரடியாக தொடர்புகொள்ள முடியும்.
USB என்பது ஒரு புரவர்சார் முறைமை (host-based system). ஒரு USB அமைப்பில் ஒரு கணினி புரவர் சாதனமாக தேவைப்படுகிறது. இப்புரவருக்கு இணைந்திருக்கும் அனைத்துச் சாதனங்களும் அடிமைகளாக திகழ்கின்றன. கணினி/புரவர் தவிற்று USB பொருள்களின் தருக்கங்களில் அடிமை செயல்கூறு மற்றும்தான் அடங்கியுள்ளன. ஆகையால் USB சாதனங்கள் நெருப்புக்கம்பி சாதனங்களைவிட மலிவு விலைகளில் கிடைக்கின்றன.
ஒரு USB அமைப்பில் மூன்று வகையான சாதங்கள் இணைக்கப்படலாம். முதலாவது புரவர் (host). இப்புரவர் தான் USB முறைமைக்கு கட்டுப்படுத்தி. ஒரு USB அமைப்பை படத்தில் காணலாம்.
USB சாதனங்களில் குறைதிறன் மற்றும் அதிதிறன் சாதனங்கள் என வகைக்கப்படுகின்றன. இந்த வகைபாடு உபயோகமாகும் மின்னோட்டத்திற்குக் தகுந்ததாகும். குறைதிறன் சாதனங்கள் 100mAக்குக் குறைவான மின்னோட்டத்தில் இயங்குகின்றன. அதிதிறன சாதனங்கள் 100mAயிலிருந்து 500mA வரை இயங்குகின்றன. ஒரு பாட்டைதிறன் குவியம் (bus powered hub) குறைதிறன் சாதனங்களுக்கு மட்டும் மின்திறனை வினியோகப்படுத்தும். ஒரு பாட்டை திறன் குவியத்தில் மொத்த மின்னோட்ட உபயோகம் 500mAக்குள் இருத்தல் வேண்டும். பாட்டை திறன் குவியம் ஒரு அதிதிறன் சாதனம் ஆகும். ஆகையால் இது மேற்புறம் புரவர் அல்லது சுயதிறன் குவியத்திற்கு இணைக்கப்படுகிறது. ஒரு சாதனம் 500mAத்திற்கு மேல் தேவைப்பட்டால் அது சுயதிறனாக இருக்கவேண்டும். ஒரு சுயதிறன் குவியம் பாட்டை திறன் குவியத்துடன் இணைக்கப்படலாம். ஒரு பாட்டை திறன் குவியம் இன்னொரு பாட்டை திறன் குவியத்துடன் அல்லது நான்குக்கு மேற்பட்ட கீழ்ப்புற சாதனங்களுடன் இணைக்கப்படக்கூடாது.
USB தரவு பரிமாற்றங்கள் நான்கு வகையானவை: குறுக்கீடு, கட்டுப்பாடு, மொத்தம் மற்றும் கால
USB இயக்கமென்பொருள் சாதனங்களின் இருப்பு மற்றும் இணைதல், பரித்தல் நிகழ்வுகளை உணர்கிறது. விண்டோஸ் 98, NT5.0, XP ஆகிய இயங்குதளங்கள் இந்த USB இயக்கமென்பொருளுடன் வினியோகிக்கப்படுகிறது. இந்த மென்பொருள் செருகு இயக்க நெறிமுறையை (plug & play) கடைப்பிடிக்கிறது.
தொடரும்
மூலங்கள்:
(c) பதிப்புரிமை தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/COPYRIGHT THOZHILNUTPAM.COM